fbpx

புதிய அச்சுறுத்தலாக மாறி வரும் அடினோவைரஸ்.. யாருக்கு அதிக பாதிப்பு..? நோயை எப்படி தடுப்பது..?

சமீபகாலமாக நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அடினோவைரஸ்கள் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அடினோவைரஸ் வேகமாக பரவக்கூடிய தொற்று நோயாகும்.. குழந்தைகள் உள்ளிட்ட பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் ஆபத்தானது.

அடினோவைரஸ் வயிற்று பிரச்சனைகள், சளி, நிமோனியா என பல்வேறு நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தலாம். இந்த வைரஸ் தோல் தொடர்புகள் மூலமாகவும், இருமல் மற்றும் தும்மல் மூலம் காற்று மூலமாகவும், பாதிக்கப்பட்ட நபரின் மலம் மூலமாகவும் பரவுகிறது. இந்த வைரஸ் மனித மலத்தில் நீண்ட நேரம் இருக்கக்கூடும்; எனவே சரியான சுகாதாரம் மிகவும் முக்கியமானது.. இதுவரை, இந்த வைரஸுக்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் அல்லது குறிப்பிட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை.

இந்த வைரஸ் வயது வித்தியாசமின்றி யாரையும் பாதிக்கலாம்.. ஆனால் இது பொதுவாக குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளில் அதிகம் காணப்படுகிறது. எனினும் அனைவருமே அடினோவைரஸில் இருந்து தற்காத்து கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சோப்பு அல்லது சானிடைசர் மூலம் கைகளை கழுவுதல் மற்றும் நெரிசலான இடங்களில் முகமூடியை அணிதல், இருமல் இருப்பவர்களிடமிருந்து சமூக இடைவெளியை பராமரித்தல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்..

’மக்களே உஷார்’..!! ’மழைக்காலங்களில் வேகமாக பரவும் நோய்கள்’..!! ’தப்பிக்க இதுதான் ஒரே வழி’..!!

எனினும் இதுகுறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. தொண்டை எரிச்சல் மற்றும் தும்மல் போன்ற லேசான அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால், அது சில நாட்களில் குறைந்துவிடும்.. ஆனால் நுரையீரல் பாதிப்பு அல்லது நிமோனியாவின் அறிகுறிகள் இருந்தால் மட்டுமே அது கவலைக்குரியது, ஏனெனில் நோய் கடுமையானதாக மாறும். ஒரு வைரஸ் இரத்த ஓட்டத்தில் நுழைந்தால், அது எந்த உறுப்பையும் பாதிக்கலாம். ஆனால் பொதுவாக, பெரும்பாலான அடினோவைரஸ் காரணமாக, குடல் மற்றும் நுரையீரல்தான் அதிகம் பாதிக்கப்படும்.

நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளவர்கள் அல்லது மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் அல்லது கீமோதெரபியில் இருப்பவர்கள் ஆகியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக இருக்கும்.. அத்தகைய நபர்கள் அடினோவைரஸால் பாதிக்கப்பட்டால் நிமோனியாவை உருவாக்கும் வாய்ப்பு அதிகம். எனவே அவர்களை கூடுதல் கவனத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும்..

Maha

Next Post

வரும் 4, 5 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று...! வானிலை மையம் எச்சரிக்கை...!

Thu Mar 2 , 2023
வரும் 4, 5 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 4-ம் தேதி தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 5-ம் தேதி தமிழ்நாடு, […]
மிரட்டும் ’மாண்டஸ்’ புயல்..!! மிரண்டுபோன வானிலை மையம்..!! BIG WARNING..!!

You May Like