நடிகை அதிதி ராவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் சித்தார்த். அவரது வாழ்த்து பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீப காலங்களில் அதிக கிசுகிசுக்கப் பட்ட காதல் ஜோடி என்றால் சித்தார்த் அதிதி தான். அதிதி மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மகாசமுத்திரம் என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் படபிடிப்பு தளத்தில் இருவரும் காதல் வயப்பட்டதாக தகவல்கள் பகிரப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளில் இருவரும் இணைந்தே காணப்படுகிறார்கள். பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சி, ஏ.ஆர்.ரஹ்மானின் மகளின் திருமண நிச்சயதார்த்தம் ஆகிய நிகழ்ச்சியில் இருவரும் இணைந்தே கலந்துகொண்டனர். மேலும் இருவரும் சேர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோக்களை பகிர்வது பாடலிற்கு சேர்ந்து நடனமாடுவது என ரசிகர்களை குழப்பத்தில் வைத்திருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் நேர்காணல் ஒன்றில் அதிதி தங்களது காதலை உறுதிப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். சித்தார்த்தை தான் காதலிக்கிறாரா என்கிற கேள்விக்கு அவர் வாயில் விரல் வைத்து சைலன்ஸ் எனபதைப் போல் சிரித்துக் கொண்டே பதிலளித்திருந்தார். பல்வேறு கிசுகிசுக்களுக்குப் பிறகு நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி ஆகிய இருவரும் காதலித்து வரும் தகவல் தற்போது உறுதிபடுத்தப் பட்டுள்ளது. இன்று நடிகை அதிதி ராவ் ஹைதாரி தன் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சித்தார்த்.
இந்தப் பதிவில் அதிதியின் தோளில் தான் சாய்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அவரை பார்ட்னர் என்று அழைத்துள்ளார். மேலும் ஆங்கிலத்தில் கவிதை எழுதி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் சித்தார்த். இதற்கு பதிலாக கமெண்ட் செய்த அதிதி “ நீ இவ்வளவு அழகாக கவிதை எழுதுவாய் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டதே “ என்று கூறியுள்ளார்.