fbpx

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தேதியை நீட்டித்து உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது

தொழில்நுட்ப கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகை பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2024-25ம் கல்வி ஆண்டின் நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, முதலாண்டு மற்றும் பகுதி நேர பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து முடிந்து ஜூலை 1-ம் தேதி முதல் வகுப்புகள் நடக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக பட்டயப் படிப்பில் (டிப்ளமோ) மாணவர் சேர்க்கை அளவை அதிகரிக்கும் வகையிலும், துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் உயர்கல்வி நலன் கருதியும் அவர்களுக்கு பட்டயப் படிப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு அளிக்கும் வகையிலும், 12 மற்றும் 10ம் வகுப்பு துணைப் பொது தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ள மாணவர்களை நேரடியாக இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாண்டு, பகுதி நேரப் பட்டயப் படிப்புகளில் சேர்க்க வசதியாக மாணவர் சேர்க்கை தேதியை வரும் 14-ம் தேதி வரை நீட்டித்து அனுமதி வழங்கப்படுகிறது.

English Summary

Admission to Polytechnic Colleges

Vignesh

Next Post

Wayanad Landslide | நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி..!!

Sat Aug 10 , 2024
Prime Minister Narendra Modi is set to visit Kerala's Wayanad district on Saturday, August 10, to assess the situation in the landslide-affected areas and oversee the ongoing relief and rehabilitation efforts.

You May Like