fbpx

ADMK | ’இப்பவே மெகா கூட்டணி உருவாகியிருச்சே’..!! இரவோடு இரவாக ஆதரவு..!! துள்ளிக் குதிக்கும் எடப்பாடி..!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் தங்களின் நிலைப்பாடுகள் குறித்து அறிவித்து வருகின்றன. பெரிய கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்யும் முனைப்பில் இருந்து வரும் நிலையில், சிறு கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ள 3 அணிகளில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிவித்து வருகின்றன.

அப்படி சிறு கட்சிகள் பலவும் அதிமுகவுக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றன. புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புரட்சி பாரதம், புரட்சித் தமிழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு முத்தரையர் சங்கம், மனித உரிமைகள் கழகம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதைத் தவிர 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் என்ற கட்சியை நடத்தி வந்த ஜோதிகுமார், தனது கட்சியை கலைத்து விட்டு அதிமுகவில் இணைந்திருக்கிறார்.

இந்நிலையில், தமிழ்நாடு மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சிவராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்றிரவு சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசினர். அப்போது மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். மேலும், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளனர். சிறு சிறு கட்சிகளும் நம்மை தேடி வருவதால், எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியில் உள்ளார்.

Read More : ADMK | இரட்டை இலைக்கு சிக்கல்..!! வேறு சின்னத்தில் போட்டியிடும் அதிமுக..? அதிர்ச்சியில் எடப்பாடி..!!

Ration | ரேசனில் பொருட்கள் கிடைக்காது..!! போராட்டத்தில் குதித்த பணியாளர்கள்..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

Chella

Next Post

மகிழ்ச்சி...! கிளாம்பாக்கத்தில் ரூ.74.50 கோடி மதிப்பில் புதிய ஆகாய நடைமேம்பாலம்...!

Tue Mar 12 , 2024
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய நுழைவாயிலில் ரூ.74.50 கோடி மதிப்பில் புதிய ஆகாய நடைமேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை 400 மீட்டர் தூரத்திற்கு நடை மேம்பாலம் அமைகிறது. தொடர்ந்து சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.12 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகளுடன் கூடிய […]

You May Like