fbpx

சென்னை அருகே மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து…..! 15 லட்சம் மோசடி செய்த அதிமுகவின் பிரமுகர் அதிரடி கைது…..!

சென்னை தரமணி எம்ஜிஆர் நகர் காந்தி குறுக்கு தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி(57) இவர் தரமணி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றரை வழங்கினார். அந்த புகார் மனுவில் கடந்த 2018 ஆம் வருடம் திருவான்மியூர் மேட்டுறவை சேர்ந்த குணசேகரன்(70) என்பவரின் அறிமுகம் கிடைத்தது அவர் என்னுடைய மகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் வேலை வாங்கி தருவதற்காக அவர் கேட்டபடி 15,75000 தெரிவித்தபடி வேலை வாங்கி தரவில்லை கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு என்னுடைய பணத்தை வாபஸ் பெற்று தர வேண்டும் என்று அந்த புகாரில் அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பாக தரமணி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பரமேஸ்வரி வழங்கி புகார் கூறியிருந்தது. உண்மைதான் என்று தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் புகாருக்கு உள்ளான குணசேகரனை கைது செய்தனர். அதன்பிறகு அவரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

அத்துடன் தலைமறைவாக இருக்கின்ற குணசேகரனின் மனைவி சொக்கியை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட குணசேகரன் அதிமுகவின் தலைமை கழக பேச்சாளராக இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.

Next Post

கரையை கடந்த பைபர்ஜாய் புயல்..!! அடுத்த டார்கெட் எங்கு தெரியுமா..? வெள்ள அபாய எச்சரிக்கை..!!

Fri Jun 16 , 2023
அரபிக்கடலில் நிலைக் கொண்டிருந்த பைபர்ஜாய் புயல் குஜராத்தின் கட்ச் – சவுராஷ்டிரா வளைகுடாவில் உள்ள ஜகாவு துறைமுகம் அருகே மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்ததன் காரணமாக குஜராத்தின் கட்ச் மற்றும் சவுராஷ்டிராவின் கடலோர பகுதிகளில் கடுமையான காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்து […]

You May Like