fbpx

முன்னேறும் ஆதித்யா எல்-1 விண்கலம்…! 4-வது முறையாக சுற்று வட்டப்பாதை உயரம் அதிகரிப்பு..!

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2ஆம் தேதி காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துக் கொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 4 மாத பயணத்திற்கு பின்னரே விண்கலம் சென்று சேரும் என்றும் அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.

ஆதித்யா-எல்1 சுற்றுப்பாதை உயரம் கடந்த 3ம் தேதியன்று முதல் முறையாக வெற்றிகரமாக மாற்றப்பட்டது. பின்னர் கடந்த 5-ஆம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டு 282 கி.மீ x 40,225 கி.மீ சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி ஆதித்யா எல்1 புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக வெற்றிகரமாக உயர்த்தி 96 கி.மீ x 71767 கி.மீ சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்தது.

இந்நிலையில் ஆதித்யா எல் விண்கலத்தின் உயரம் இன்று 4வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அதிகாலை 2.15 மணியளவில் விண்கலத்தின் உயரம் 4வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதித்யா விண்கலம் பூமியை குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 973 கிலோ மீட்டர் தூரத்திலும் சுற்றி வரும்.

சுற்று வட்டப்பாதை உயர்வு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இன்று 4வது முறையாக சுற்று வட்டப்பாதை உயரம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த உயர்வு நடவடிக்கை வரும் 19ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Kathir

Next Post

குறைந்த பணியிடங்களே உள்ளன....! உடனே விண்ணப்பியுங்கள் இந்த தகுதி இருந்தால் போதும், அருமையான வேலைவாய்ப்பு....!

Fri Sep 15 , 2023
நாள்தோறும், நம்முடைய செய்தி நிறுவனத்தில், பல்வேறு வேலை வாய்ப்பு குறித்த செய்திகளை நாம் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றும் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதை பார்த்து, படித்து தெரிந்து கொண்டு வேலையில்லாத பட்டதாரிகள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இன்று தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் சார்பாக வெளியாகி இருக்கின்ற ஒரு வேலை வாய்ப்பு குறித்த செய்தியை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, அந்த நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற […]

You May Like