fbpx

15 வருடங்களுக்குப் பிறகு பெண் தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன்..!

15 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்துக்காக பெண் வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், மீனா நடிப்பில் வெளியான படம் ‘அவ்வை சண்முகி’. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வயதான பெண் வேடத்தில் நடித்திருப்பார். அவரது அந்த கதாபாத்திரமும், நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.

இதையடுத்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2008-ம் ஆண்டு வெளியானது ‘தசாவதாரம்’. இந்தப் படத்தில் 10 வெவ்வேறு கெட்டப்பில் வரும் கமல் கிருஷ்ணவேணி பாட்டி கதாபாத்திரத்தில் பெண் வேடமிட்டிருப்பார். இந்நிலையில், தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு ‘இந்தியன் 2’ படத்துக்காக அவர் மீண்டும் பெண் வேடமிட்டு நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் முக்கியமான காட்சி ஒன்றுக்காக சிறிது நேரமே நீடிக்கும் பெண் தோற்றத்தில் கமல் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்2’ படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி இருக்கிறது. இந்தப் படம் முடித்தப் பின்பு கமல்ஹாசன் ‘கல்கி 2989 ஏடி’, வினோத்துடன் ‘KH 233’, மணிரத்னமுடன் ‘KH 234’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

Maha

Next Post

சாட்ஜிபிடி-க்கு அபராதம் விதிப்பு, தனிநபர் விவரம் கசிவு..!

Fri Jul 28 , 2023
இன்றைய ஏஐ சூழ் உலகில் பெரும்பாலான டிஜிட்டல் சாதன பயனர்களின் பார்வையை பெற்றுள்ளது சாட்ஜிபிடி. கதை சொல்ல, கட்டுரை படிக்க, பாடல் எழுத, கம்ப்யூட்டர் கோடிங் என பயனர்கள் கேட்கும் சகல கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கும் இதில் பதில் கிடைக்கும். ஓபன் ஏஐ நிறுவனம் வடிவமைத்த இந்த சாட்பாட் கடந்த ஆண்டு அறிமுகமானது. இந்தச் சூழலில், சாட்ஜிபிடி பிளஸ் கட்டண சந்தா பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்துள்ளன. பயனர்களின் பெயர், […]

You May Like