fbpx

“500 ஆண்டு வனவாசம்..” “ஆரத்தி எடுத்து வரவேற்ற பிரதமர்” விண்ணை பிளந்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்.! புதிய அத்தியாயம்.!

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உட்பட நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள் என சிறப்பு விருந்தினர்களும் லட்சக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர். வெகு விமர்சையாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேக நிகழ்வு பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்விற்காக நண்பகல் 12 மணி அளவில் அயோத்தி நகருக்கு வந்தடைந்த பிரதமர் மோடி சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ராமஜென்ம பூமிக்கு வருகை புரிந்தார்.அவரது வருகைக்குப் பின் கும்பாபிஷேக நிகழ்வுகள் ஆரம்பமானது. 121 அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை தொடங்க பிரதமர் மோடி மோகன் பகவத் மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

500 ஆண்டுகள் இரண்டாவது வனவாசத்திற்கு பிறகு 5 வயது பாலகனாக ஸ்ரீராமர் தனது தாய் வீடு திரும்பிய இந்த கும்பாபிஷேகம் மற்றும் பிரதிஷ்டை நிகழ்வின்போது சிறப்பு மந்திரங்களை உச்சரித்து வழிபாடு செய்த பிரதமர் மோடி தாமரை மலர்களைக் கொண்டு ஸ்ரீ ராமரின் குழந்தை பருவ சிலையை பிரதிஷ்டை செய்தார். இதனைத் தொடர்ந்து சிலைக்கு ஆரத்தி எடுத்த அவர் தன்வாத் பிரணாமம் செய்து ஸ்ரீராமரை தொழுது வணங்கினார். இந்தப் பிரதிஷ்டை நிகழ்விற்கு பிறகு ஸ்ரீ ராமரின் கண்கள் திறக்கப்பட்டது.

நிகழ்வின்போது கூடியிருந்த ஸ்ரீராமரின் பக்தர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை எழுப்பினர். அவர்களின் இந்த கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் கர்ஜனையாக ஓங்கி ஒலித்தது. சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக நிகழ்வின்போது கூடியிருந்த பக்தர்களுக்கு இந்திய விமானப்படையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்களை தூவினர். கூடியிருந்த பக்தர்களின் முன்னிலையில் இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டது.

ஜனவரி 16ஆம் தேதி சாராயு நதிக்கரையில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளுடன் தொடங்கிய கும்பாபிஷேக நிகழ்வு இன்று ராம் லாலாவின் சிலை கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதோடு முடிவடைந்து இருக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் 7000க்கும் அதிகமான சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு ஸ்ரீராமரின் ஆசியைப் பெற்றனர். இந்த நிகழ்வின் மூலம் இந்திய வரலாற்றுப் பக்கங்களில் புதிய அத்தியாயம் ஒன்று எழுதப்பட்டிருக்கிறது.

Next Post

தலைக்கேறிய போதையால் விபத்தில் சிக்கிய மேக்ஸ்வெல்..? ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட பரபரப்பு சம்பவம்..!!

Mon Jan 22 , 2024
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் விபத்தில் சிக்குவதும், தன்னை காயப்படுத்திக்கொள்வதும் புதிய விஷயமில்லை. அவர் கடந்த இரண்டு வருடங்களாகவே அதிகப்படியான விபத்துகள் மற்றும் காயங்களால் நீண்ட ஓய்வில் தொடர்ச்சியாக இருந்து வருகிறார். கடந்த 2022 டி20 உலகக் கோப்பையின் போது, ஒரு நண்பரின் வீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அவர் கீழே விழுந்து காலில் பயங்கர எலும்பு முறிவு ஏற்பட்டது. கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் போதும் கூட, கோல்ஃப் […]

You May Like