fbpx

அடுத்த பயங்கரம்… 9 வயது தான்… பள்ளியில் நடந்த கொடூர சம்பவம்…! பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏ…!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தலித்துகள் மீதான வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக கோபமடைந்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ பனா சந்த் மேக்வால், தனது சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க முடியாத தான், எம்எல்ஏவாக இருக்க உரிமை இல்லை என்று கூறி, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அதில், குடிநீர் பானையைத் தொட்டதற்காக ஜாலோரில் பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தலித் சிறுவன் இறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மாநிலத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ராஜன் அம்மா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனது சொந்த சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறும்போது… பதவியில் இருக்க எங்களுக்கு உரிமை இல்லை. எனது உள் குரலைக் கேட்டு, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன், அதனால் எந்தப் பதவியும் இல்லாமல் சமூகத்திற்கு சேவை செய்ய முடியும், ”என்று பரன்-அத்ரு தொகுதியின் எம்.எல்.ஏ தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடினாலும், தலித்துகள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீதான வன்கொடுமைகள் தொடர்கின்றன. அட்டூழியங்களைப் பார்த்து நான் வேதனைப்படுகிறேன், என் சமூகம் சித்திரவதை செய்யப்படுவதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பயங்கர சம்பவம்... போஸ்டர்கள் கிழிப்பு... மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்‌...! ஆட்சியர் அதிரடி உத்தரவு...!

Tue Aug 16 , 2022
நாடு முழுவதும் 76வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கர்நாடகாவின் ஷிவமோகாவில் அமீர் அகமது வட்டத்தில் ஒட்டப்பட்டிருந்த சாவர்க்கரின் போஸ்டரை அகற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.திப்பு சுல்தான் போஸ்டர் ஒட்டுவதற்காக சவர்க்கரின் பேனர்களை அகற்ற திப்பு சுல்தான் ஆதரவாளர்கள் முயன்றதால் மாவட்டம் முழுவதும் பெறும் பதற்றம் நிலவியது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தடியடி நடத்தினர். அமீர் அகமது வட்டத்தில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் […]

You May Like