fbpx

அல்லு அர்ஜுன் கைதுக்கு பிறகு தொடர்ந்து எகிறிய புஷ்பா 2 வசூல்..!! 11 நாட்களில் செய்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

ஐதராபாத்தில் புஷ்பா 2 திரைப்பட முதல் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 வயதான பெண் உயிரிழந்த நிலையில் அவரது 8 வயது மகன் படுகாயமடைந்தார். இந்நிலையில் அச்சிறுவனுக்கு விட்டு விட்டு காய்ச்சல் வருவதாகவும், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. படம் ஏற்கனவே 1000 கோடி என்ற பிரம்மாண்ட சாதனையை கடந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் புஷ்பா 2 ஹிந்தியில் பெற்ற வசூல் தான். ஹிந்தியில் மட்டும் 10 நாட்களில் 507.5 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. நேற்று 11ம் நாள், ஞாயிற்றுக்கிழமை என்பதால் வசூல் மீண்டும் உச்சம் தொட்டு இருக்கிறது. நேற்று மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் வந்திருக்கிறது என தயாரிப்பாளர் அறிவித்து இருக்கிறார்.

இன்னும் சில தினங்களில் மொத்த வசூல் 2000 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அல்லு அர்ஜுன் கைதான அடுத்த நாளில் முந்தைய நாளை விட 71 சதவீதம் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றிருக்கிறது.

Read more ; பாஜக-வில் இணையும் நடிகை கஸ்தூரி..? அண்ணாமலையுடன் திடீர் சந்திப்பு..!! – என்ன மேட்டர்?

English Summary

After Allu Arjun’s arrest, Pushpa 2’s collection continued to soar..!! Do you know how much was collected in 11 days?

Next Post

”ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பாலம் தரமற்றதா”..? அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேட்டி..!!

Mon Dec 16 , 2024
Minister E.V. Velu has provided an explanation to the question regarding the new bridge that was washed away in Tiruvannamalai.

You May Like