fbpx

இப்படி பேச சொன்னதே விஜய் சேதுபதி தான்? மீண்டும் வன்மத்தை கக்கும் அர்னவ்..!! – வறுத்தெடுத்த நெட்டிசன்கள் 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி என்றால் அது ‘பிக் பாஸ்’ தான். இந்த நிகழ்ச்சியை முதல் சீசன் தொடங்கி 7வது சீசன் வரை விறுவிறுப்பாகவும் சுவாரசியம் குறையாமலும் தொகுத்து வழங்கி வந்தவர் உலக நாயகன் கமல் ஹாசன். சில காரணங்களினால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலக, தற்போது விஜய் சேதுபதி சீசன் 8 தொகுத்து வழங்கி வருகிறார். அக்டோபர் 6ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். 

முதல் வார எவிக்ஷனாக, பிக்பாஸ் 8 வீட்டிலிருந்து வெளியேறியவர், ஃபேட்மேன் ரவீந்தர். பிக்பாஸ் போட்டியை ரிவ்யூ செய்து வந்த இவருக்கு, இந்த சீசனில் வாய்ப்பு கிடைத்து, அனைவரையும் என்டெர்டெயின் செய்து வந்தாலும், மக்களின் வாக்குகள் குறைவாக இருந்ததால் இதிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  இந்த வாரம், செல்லம்மா தாெடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர் அர்னவ் வெளியேற்றப்பட்டார். 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் சிலரை ஜால்ரா என கூறிபிட்டார். மேலும், “என்னடா பன்னிட்டு இருக்கீங்க இங்க..க்ரூப் ஃபார்ம் பண்ணவா வந்தீங்க? நான் உங்க கூட பேசலன்றதுக்காக என்ன தள்ளி வச்சுட்டீங்க..” என அவர் பேசிக்கொண்டே போக, அவரை விஜய் சேதுபதி கண்டித்தார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் என்னதான் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருந்தாலும் எவிக்ஷன் ஆகி வெளியே வந்து தொகுப்பாளர் முன்பு நின்று சக போட்டியாளர்களிடம் பேசும்போது எல்லோரும் பழைய பகையை மறந்து பேசிக்கொள்வார்கள். ஆனால் நேற்று தனது மொத்த வன்மத்தையும் அர்னவ் கொட்டி தீர்த்தார். நேற்றிலிருந்து ட்விட்டரில் அர்னவ் ட்ரெண்ட் ஆகி இருக்கும் நிலையில் மீண்டும் தனது வன்மத்தை இன்ஸ்டாகிராம் போஸ்டுகள் மூலம் காட்டி வருகிறார்.

அதில், விஜய் சேதுபதி தான் அட்வைஸ் பண்ற மாதிரி பேசாதீங்க. நல்லா அடிச்சு பேசுங்க என்று கூறியது போல் மீம் பகிர்ந்து உள்ளார். பின், தான் வெளியேறிய போது பேசிய அனைத்தையும் மீண்டும் மீம்கள் மூலம் பகிர்ந்து வருகிறார். தற்போது இந்த பதிவுகளை பார்த்து நெடிசன்கள், என்னது விஜய் சேதுபதி தான் பேச சொன்னாரா?, இன்ஸ்டாகிராமிடம் டிஸ்லைக் பட்டன் ஆன் பண்ணுங்க, இதையெல்லாம் உள்ளே இருக்கும் போதே சொல்ல வேண்டியது தானே, நீ ஒரு விஷம் என்று அர்னவை கமெண்ட்கள் மூலம் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Read more ; ”தினமும் இப்படி குளிப்பதால் கூட ஆண்மை பறிபோகும்”..? உடனே மாத்திக்கோங்க..!! எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்..!!

English Summary

After Arnav’s exit from the Bigg Boss show, the Insta posts he shared are trending on the internet

Next Post

மழைக்காலம் தொடங்கியாச்சு..!! அனைவரது வீடுகளிலும் இதை கண்டிப்பா பொருத்துங்க..!! மின்சார வாரியம் அறிவுறுத்தல்..!!

Mon Oct 21 , 2024
(RCD) is a protective device. It is capable of automatically switching off the power if there is any fault in the power flow.

You May Like