ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இபிஎஃப்ஓ வழங்குகிறது.. அதில் ஒன்று தான் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS).. இந்த திட்டம் நவம்பர் 19, 1995 முதல் நடைமுறைக்கு வந்தது..
மேலும் பிஎஃப் திட்டத்திற்குத் தகுதிபெறும் அனைத்து ஊழியர்களும் EPS ஓய்வூதிய திட்டத்திற்கும் தகுதி பெறுகின்றனர், இதனால் பிஎஃப் சந்தாதாரர்கள் 28 வயதை அடைந்த பிறகு ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். இந்த ஓய்வூதியத் திட்டம் அனைத்து பயனாளிகளுக்கும் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு மாதாந்திர பலன்களை வழங்குகிறது; இந்த நன்மைகளை இறந்த இபிஎஸ் ஓய்வூதியதாரரின் குடும்ப உறுப்பினர்களும் பெறலாம்.
ஓய்வூதியம் பெறுபவர் இல்லாவிட்டால், இந்த நன்மைகளைப் பெற என்ன ஆவணங்கள் தேவை?
- இறப்புச் சான்றிதழ்
- பயனாளிகளின் ஆதார் அட்டைகளின் நகல்கள்,
- பயனாளிகளின் வங்கிக் கணக்கு விவரங்கள் (அசல் ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது வங்கி பாஸ்புக்கின் சான்றளிக்கப்பட்ட நகல்) மற்றும்
- வயதுச் சான்று
எவ்வளவு ஓய்வூதியம் செலுத்த வேண்டும்? இபிஎஃப்ஓ விதிகளின்படி, இறந்தவரின் குழந்தைகள் மாதாந்திர விதவை ஓய்வூதியத்தில் 75% தொகையைப் பெறுவார்கள்; ஒரு நேரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.750 இருக்கும். அவர்களுக்கு இருபத்தைந்து வயது வரை மட்டுமே தொகை வழங்கப்படும். எனினும் இறந்தவரின் ஊனமுற்றிருந்தால் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதியம் பெறுபவருக்கு குடும்பம் இல்லை என்றால், அவர் இறந்த பிறகு, அது வாழ்நாள் முழுவதும் நாமினிக்கு வழங்கப்படும்.