fbpx

”எல்லாத்தையும் பண்ணிட்டு இப்போ பிடிக்கலன்னு சொல்ற”..!! கழட்டிவிட்ட காதலன்..!! கதறும் இளம்பெண்..!!

சென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர், தனியார் பள்ளியில் தாளாளராக வேலை பார்த்து வருகிறார். இவர், கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2016ஆம் ஆண்டு படித்து வந்தபோது, ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2023ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பின்னர், 3 மாதத்தில் சதீஷ்குமார் திருமணத்தில் விருப்பமில்லை எனக் கூறியதாகவும், இது குறித்து அந்தப் பெண் சதீஷின் வீட்டிற்கு சென்று கேட்டபோது, தான் வேலை செய்யும் வங்கியில் பெண் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.

அதோடு, காதலித்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதேபோல இருவரும் காதலித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணை சதீஷ் பலமுறை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், கல்யாணத்திற்கு மண்டபத்தை பதிவு செய்வதற்கு முன் பணமாக அந்தப் பெண்ணிடம் சதீஷின் தாய் மல்லிகா கேட்டதின் பேரில் அந்த பெண் தனது வீட்டிற்கு தெரியாமல் வங்கியில் லோன் எடுத்து அதற்கு வட்டியுடன் 1.70 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், காதலித்துக் கொண்டிருந்தபோது சதீஷ் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டதை தனக்குத் தெரியாமல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்ததாகவும் அதை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டியதாகவும், அந்தரங்க போட்டோக்கள், வீடியோக்களை வெளியில் விடாமல் இருப்பதற்கு ரூ.20 லட்சம் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இ

தையடுத்து, அந்த பெண்ணின் குடும்பத்தினர் தாம்பரம் மாநகர காவல் ஆணையராக அலுவலகத்தில் புகாரளித்த நிலையில், 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த போலீசார், சதீஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : ”அம்மா உணகங்களில் இலவச உணவு”..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

English Summary

Sathish and his family assaulted and threatened to kill the woman he loved.

Chella

Next Post

மக்களை கைவிட்ட விடியா திமுக அரசு..!! அது என்ன Rapid Reponse Team..? எடப்பாடி பழனிசாமி சொன்னதை கவனிச்சீங்களா..?

Wed Oct 16 , 2024
General Secretary Edappadi Palaniswami said that unlike the inactive Vidya DMK government, AIADMK will always work with concern for the people.

You May Like