fbpx

டோக்கன் மட்டும் கொடுத்துவிட்டு; வேட்டி, சேலை கொடுக்காமல்… தப்பித்து ஓடிய பாஜகவினர்… ஆத்தூரில் பரபரப்பு..!

ஆத்தூரில், டோக்கன் கொடுத்து விட்டு இலவச வேட்டி,சேலை வழங்காமல் எஸ்கேப்பான, பாஜக நிர்வாகிகளை, பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூரில், பாஜக சார்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பழைய பஸ் நிலையம் மணிக்கூண்டு அருகில் நேற்று நடந்தது. இதில் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாநில பட்டியலின பிரிவு துணைத்தலைவர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதாக சொல்லி, பாஜக கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட டோக்கன்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், நிர்வாகிகள் பேசி முடித்தவுடன், பெயரளவிற்கு 10 பேருக்கு வேட்டி, சேலைகள் கொடுத்துவிட்டு, நிர்வாகிகள் மேடையை விட்டு இறங்கி, காரில் ஏறிச்செல்ல முயன்றனர். ஆனால், டோக்கன் வாங்கிய 100-க்கும் மேற்பட்ட பெண்கள், வேட்டி, சேலை கிடைக்காத அதிர்ச்சியில் நிர்வாகிகளை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகிகள், பாதுகாப்பிற்கு இருந்த காவல்துறையினரை அழைத்து டோக்கன்களுடன் இலவச வேட்டி, சேலை கேட்டு முற்றுகையிட்டவர்களை அப்புறப்படுத்தும்படி கூறினர். அதன்படி காவல்துறையினர் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.  இதை தொடர்ந்து, பாஜக நிர்வாகிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

Baskar

Next Post

துபாயில் இறந்த தந்தை..! 2 ஆண்டுகளுக்குப் பின் மகன்களிடம் அஸ்தியை ஒப்படைத்த கேரள பெண்..!

Sat Aug 27 , 2022
துபாயில் கொரோனாவால் இறந்தவரின் அஸ்தி, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மகன்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த குழிச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (44). இவரின் மனைவி லதா புஷ்பம் கடந்த 2012இல் ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு புக்லீன் ரிக்ஸி (22) என்ற மகளும், அக்லீன் ரகுல் (20) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், ராஜ்குமார் ஐக்கிய அரபு நாட்டில் பணியாற்றி வந்தார். இதற்கிடையே, […]
துபாயில் இறந்த தந்தை..! 2 ஆண்டுகளுக்குப் பின் மகன்களிடம் அஸ்தியை ஒப்படைத்த கேரள பெண்..!

You May Like