fbpx

’அந்த வீடியோ வெளியான பிறகு’..!! ’எப்போதும் நித்தியானந்தாவுடன் தான் இருப்பேன்’..!! நடிகை ரஞ்சிதா பரபரப்பு பேட்டி..!!

நடிகை ரஞ்சிதா தமிழ் சினிமாவில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்தவர். சத்யராஜ், அர்ஜுன் உள்ளிட்டோருடன் நடித்த அவர், ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். அந்தச் சமயத்தில் நித்தியானந்தாவுடன் அவர் நெருக்கமாக இருந்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு நித்தியிடம் முழுதாக ஐக்கியமான அவர், இப்போது கைலாசாவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான், அவர் அளித்திருந்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

அவர் அளித்திருந்த அந்தப் பேட்டியில், “நான் பெரிய பணக்கார வீட்டு பெண் எல்லாம் இல்லை. எனது அப்பா தொழிலதிபரும் இல்லை. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பெண் தான். அந்தச் சம்பவத்திலிருந்து என்னால் வெளிவர முடியவில்லை. அதுதொடர்பாக நடந்த வழக்கிலும் என்னை காப்பாற்றுவதற்கு எனது அப்பாவால் முடியவிலை. இந்தப் பிரச்சனையை நினைத்து தற்கொலை எண்ணத்துக்கு சென்றேன். பிறகு என்னை விட்டால் குடும்பத்தை பார்க்க ஆள் இல்லை என்பதால் அதிலிருந்து மீண்டு வந்தேன்.

நான் நடிகையாக இருந்த சமயத்தில் வந்த கிசுகிசு என்றால் நான் ஷூட்டிங்கிலும் புத்தகமும், கையுமாக இருப்பேன் என்பதுதான். அந்தப் புத்தகங்கள்தான் என்னை அமைதியாக்கி பக்குவப்படுத்தியது. இருப்பினும், அந்தக் கசப்பான அனுபவம் தந்த வலி தீராதது. எனது கணவரும் அதனால் என்னைவிட்டு பிரிந்துவிட்டார். எனக்கு நடந்த விஷயங்களை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம்.

எனது இளமை காலத்திலிருந்தே கடவுள், ஆன்மீகம் மீது நிறைய பற்று வைத்திருப்பவள் நான். அதை இன்று வரை கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் பற்றி எத்தனையோ விமர்சனங்கள் வந்திருக்கலாம். ஆனால், நான் இன்றும் நித்தியானந்தாவின் சீடர்தான். இப்போதும் அவருடனேயேதான் இருக்கிறேன். இனியும் அவருடன் தான் இருப்பேன். ஆன்மீக வழியில் செயல்படுவேன்” என்று தெரிவித்திருந்தார்.

Read More : உங்ககிட்ட DigiLocker செயலி இருக்கா..? அதிரடியாக வந்த மாற்றம்..!! அது என்ன UMANG..? உடனே இதை பண்ணுங்க..!!

English Summary

I am still with him. I will be with him from now on. “I will work in a spiritual way,” he said.

Chella

Next Post

Viral Video | சூப்பர் ஸ்டார் படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த விஜய்..!! அதுவும் எப்படி வந்தார் தெரியுமா..?

Thu Oct 10 , 2024
Actor and president of Tamil Nadu Vetri Kazhagam, Vijay enjoyed watching the film Vediyaan in the theatre.

You May Like