fbpx

Agnipath | இளைஞர்களே..!! காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து..!! அதிரடி அறிவிப்பு..!!

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய முறையில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணி நடைபெறும் என உறுதியளித்துள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் முன்னணி தலைவரான சச்சின் பைலட், காங்கிரஸ் எம்.பியான தீபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில், ”ஜி-20 உச்சி மாநாட்டுக்கு ரூ.4,100 கோடி, பிரதமரின் விமானத்துக்கு ரூ.4,800 கோடி, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட ரூ.20 ஆயிரம் கோடி, விளம்பரங்களுக்காக ரூ.6,500 கோடியை அரசு செலவிடுகிறது. ஆனால், பணத்தை மிச்சப்படுத்துவதாக கூறி, ராணுவ ஆள்சேர்ப்பு செயல்முறையில் குழப்பத்தை ஏற்படுத்துவது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சவாலை ஏற்படுத்தும்.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய நடைமுறையில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணி நடைபெறும்” என்று தெரிவித்தனர். மேலும் இதேபோல், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்னிபத் திட்டத்தால் ராணுவத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இளைஞர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை குறிப்பிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

English Summary : Will scrap ‘Agnipath‘, revert to old recruitment scheme if voted to power: Congress

Read More : Devayani | நடிகை தேவயானியின் பண்ணை வீட்டில் இப்படி ஒரு அதிசயமா..? அடடே இது நல்லா இருக்கே..!!

Chella

Next Post

Strike | இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்..!! வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவிப்பு..!!

Tue Feb 27 , 2024
தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்டபடி வருவாய்த் துறையினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெறக்கூடிய வேலைநிறுத்த போராட்டத்தில் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மக்களவை தேர்தல் பணிகளை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய […]

You May Like