fbpx

பெரும் சோகம்…! அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்து வீர மரணம் அடைந்த முதல் வீரர்…!

அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றி மகாராஷ்டிராவைச் சேர்ந்த லக்‌ஷ்மன் என்பவர் வீர மரணம் அடைந்துள்ளார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த லக்‌ஷ்மன் காஷ்மீரிலுள்ள சியாச்சின் பனிமலையில் தேசப் பணியாற்றி உயிரை இழந்திருக்கிறார். ராணுவ வீரர்களை சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பணியின் போது கொல்லப்பட்ட முதல் அக்னிவீர் ஆவார். லக்‌ஷ்மன் மறைவிற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

தற்பொழுது அவரது மரணம் குறித்த செய்தி சமூக ஊடகங்களில் சமூக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது, அக்னிவீரர்களுக்கும் வழக்கமான வீரர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை சுட்டிக்காட்டி, அக்னி வீரர்கள் பணியில் இருக்கும்போது இறந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம், மருத்துவ உதவி உத்தரவாதமோ, ராணுவ கேன்டீன் பயன்பாடோ மற்றும் பிற சலுகைகள் கிடைக்காது, என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

அக்னிவீரர்களின் விதிமுறைகளின்படி, போரில் உயிரிழக்க நேர்ந்தால், குடும்ப உறுப்பினர்களுக்கு 48 லட்சம் பங்களிப்பு இல்லாத காப்பீடும், ரூ.44 லட்சம் இழப்பீடும் மற்றும் அவரது சம்பளத்தில் 30% பங்களிப்பையும் பெறுவார்கள். சேவா நிதி திட்டத்திற்கு அக்னிவீர், அரசாங்கத்தின் சமமான பங்களிப்புடன், வட்டியும் சேர்த்து வழங்கப்படும். கூடுதலாக, அவர்கள் இறந்த தேதியிலிருந்து அவர்களின் நான்கு ஆண்டு பதவிக்காலம் முடிவடையும் வரை செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையையும் பெறுவார்கள்.

Vignesh

Next Post

திமுக அரசின், அதிகார துஷ்பிரயோகத்தை பாஜக குழு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் - அண்ணாமலை..

Mon Oct 23 , 2023
கொடிக்கம்பம் அகற்றிய விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட தேசிய பாஜக குழுவினர் தமிழகம் வரவுள்ள நிலையில், திமுக அரசின் அத்துமீறல்களும், அதிகார துஷ்பிரயோகமும் இந்த குழு வெளிச்சத்துக்கு கொண்டுவரும் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பனையூரில் அமைந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் அருகே இருந்த கொடிக்கம்பத்தை அகற்ற கொண்டுவரப்பட்ட ஜேசிபி இயந்திரத்தையும் கற்களை கொண்டு தாக்கி […]

You May Like