உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் இருக்கின்ற கிராவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுவீர்சிங் (62). ரகுவீர்சிங்கிற்க்கு 2 மகன்கள் என்று கூறப்படுகிறது. மூத்த மகன் சமீபத்தில் மரணம் அடைந்த நிலையில், அவருடைய மனைவி மாமனார் வீட்டிலேயே தான் வசித்து வருகிறார்.
ரகுவீரின் 2வது மகனான கௌரவ் சிங் பருக்காபாத் காவல் நிலையத்தில் கான்ஸ்டேபிலாக பணியாற்றுகிறார். இவருக்கு பிரியங்கா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கின்றனர் இந்த நிலையில் ஒரே வீட்டில் இருக்கும் 2 மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இவர்களுக்குள் ஏற்படும் தகராறு மாமனார் ரகுவீருக்கு கடுமையான ஆத்திரத்தை உண்டாக்கி இருக்கிறது இளைய மருமகள் பிரியங்கா விதவையாக இருக்கும் தன்னுடைய மூத்த மருமகளிடம் தகராறு செய்வதை ரகுவீர் தட்டி கேட்டதாக தெரிகிறது. மேலும் வழக்கம் போல கடந்த திங்கள்கிழமை இரவு 2 மருமகள்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
அந்த தகராருக்கு இடையே புகுந்த மாமனார் ரகுவீரர் இளைய மருமகளான பிரியங்கா தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் அவமானம் தாங்காமல் ரகுவீர் கடுமையான ஆத்திரத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் காலை பிரியங்கா சமைத்துக் கொண்டிருந்தார் அப்போது ரகுதியில் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து பிரியங்காவின் தலையில் வெட்டி அவருடைய தலையை துண்டாக்கி இருக்கிறார் அதன் பிறகு அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ரத்தக்கறையுடன் சென்று தாமாகவே சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் ரகுவீர் காவல் நிலையத்திற்கு சென்ற போது அங்கே பிரியங்காவின் கணவர் கௌரவும் அங்கே பணியில் இருந்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து, பிரியங்காவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு இந்த சம்பவம் குறித்து மாமனார் ரகுவீரை கைது செய்த காவல்துறை,பிரியங்கவின் கணவர் உட்பட குடும்பத்தார் அனைவரின் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்திருக்கிறது.