மின் பகிர்மானக் கழகத் திட்டப் பிரிவு தலைமை பொறியாளர், அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பான சுற்றறிக்கையில், “2024 – 2025ஆம் ஆண்டுக்குள் சுமார் 15 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை வழங்க முடிவு செய்யப்பட்டு, தற்போது வரை 11,551 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாதாரண பிரிவில் 58 சதவீத இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த இலக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிகவும் மோசமான நிலையிலேயே எட்டப்பட்டுள்ளது.
தட்கல் பிரிவில் 77% மின் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. கோபி, காஞ்சிபுரம், கோவை, நாமக்கல், திண்டுக்கல் வட்டங்களில் மிக மோசமாகவே உள்ளது. எனவே, இதனை வேகப்படுத்த வேண்டும். அரசு திட்டங்களுக்கு கீழ் வரும் பயனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும், இந்த பணிகளை மார்ச் 15ஆம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும்” என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மாதம் ரூ.70,000 சம்பளம்..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!