fbpx

ஆஹா… இனி இந்த கவலை வேண்டாம்…! புதிய செயலியை அறிமுகம் செய்த காவல்துறை…! முழு விவரம் இதோ

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் Road Ease என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. சென்னையில் மழை நீர் வடிகால் வாரியம் மற்றும் சி.எம்.ஆர்.எல் பணிகள் தொடர்பாக சாலை மூடல் மற்றும் மாற்று பாதைகள் என மொத்தம் 151 சாலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு கொண்டு வந்த புதிய அபராத தொகையைச் சென்னையில் வரும் 28-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் முதல் 1500 ரூபாயும், ஸ்டாப் லைன் தாண்டினால் 500 முதல் 1,500 ரூபாயும், புட் போர்டு விதிமீறலுக்கு 500 ரூபாய் முதல் 1500 ரூபாயும், மொபைல் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் 1,000 முதல் 10,000 வரையும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் பைக் ரேஸிங், சாகசம் விதிமீறலில் ஈடுபட்டால் 15,000 முதல் 25,000 ரூபாயும், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். புதிய அபராத தொகையை பயன்படுத்தி வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து காவல்துறையினர் லஞ்சம் வாங்கினால் பொதுமக்கள் சமூக வலைதளம் அல்லது நேரிடையாக வந்து புகார் அளிக்கலாம் .

Vignesh

Next Post

பெரும் அதிர்ச்சி.‌‌. பள்ளி சென்ற 5 வயது சிறுமி..! பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆசிரியர்...!

Sun Oct 23 , 2022
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மதர்சாவில் படிக்கும் 5 வயது சிறுமியை மௌலவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கங்கா காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மௌலவி அப்துல் ரஹீமைக் கைது செய்தனர். மாவட்டத்தில் உள்ள சுக்லா கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள பாகராசியை சேர்ந்த மௌலவி அப்துல் […]

You May Like