fbpx

சந்திராயன்-3ஐ காப்பாற்றிய AI தொழில்நுட்பம்…! தரையிறங்கும்போது 150மீட்டரில் உள்ள பள்ளத்தை கண்டறிந்து தவிர்த்த லேண்டர்…!

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கி வெற்றியடைந்து சாதனை படைத்தது. இந்தவெற்றியால் நிலவு பற்றிய ஆய்வில் சாதனை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஏற்கனேவே அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சந்திராயன் 3 லேண்டர் தரையிங்கும் 150மீட்டருக்கு முன்பு லேண்டருக்கு செங்குத்தாக கீழே பள்ளத்தாக்குகளும், மேடுகளும் இருக்கின்ற ஒரு சமவெளி அற்ற பகுதி இருப்பதை லேண்டரின் கேமராக்கள் குறிப்பாக ஆபத்து தவிர்ப்பு கேமராக்கள் அதை உணர்ந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் செயல்பட்டு பள்ளத்தாக்கு உள்ள பகுதிக்கு அருகில் வெற்றிகரமாக தரை இறங்கியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

அந்த 150 மீட்டருக்கு அருகில் சந்திராயன்-3 நெருங்கும்போது, இஸ்ரோ கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து விஞ்ஞானிகளும் பதறிவிட்டனர். அந்த நிலையில் லேண்டரில் உள்ள கேமராக்கள் செயல்ப்பட்டு நடக்க இருந்த விபத்தை தவிர்த்து வெற்றி அடைந்துள்ளது. 7 கிலோமீட்டரில் எடுத்த புகைப்படத்தையும், 150மீட்டரில் எடுத்த புகைப்படத்தையும் வைத்துக்கொண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சந்திராயன்-3 லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது.

Kathir

Next Post

தரையிறங்கிய பிறகு லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படம் இஸ்ரோ வெளியீடு...

Wed Aug 23 , 2023
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கி வெற்றியடைந்து சாதனை படைத்தது. இந்தவெற்றியால் நிலவு பற்றிய ஆய்வில் சாதனை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஏற்கனேவே அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சந்திராயன் 3 லேண்டர் தரையிறங்கிய பிறகு லேண்டிங் இமேஜர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட […]

You May Like