தமிழக பாஜக தலைவர் தேர்தல் எப்போது நடந்தாலும், அதில் நான் இருக்க மாட்டேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”நான் முதலில் பாஜக தொண்டன். எனக்கு எந்த பொறுப்பைக் கொடுத்தாலும், அதை நான் நிறைவேற்றுவேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். கூட்டணி குறித்து அவர் தெளிவாகப் பேசியிருக்கிறார். அதிமுக குறித்த எனது நிலைப்பாடு அனைவருக்குமே தெரியும்.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். அதுதான் எங்களின் குறிக்கோள். அதுதான் எங்கள் கட்சியின் முதன்மையான நோக்கம். அமித்ஷாவுடனான சந்திப்பு, பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக ஒப்புக்கொண்டிருப்பதை தெளிவாக காட்டுகிறது. நான் எங்கு இருக்க வேண்டும், எந்தப் பதவியில் இருக்க வேண்டும் என்பதை பாஜக தலைமை தான் முடிவெடுக்கும். தமிழ்நாட்டில் மாற்றம் வரப்போகிறது, பாஜகவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
நாங்கள் பொறுமையாக காத்திருப்போம். இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் காத்திருப்போம். தமிழ்நாட்டில் நாங்கள் (பாஜக) ஆட்சிக்கு வருவோம். அரசியலில் அதிகாரத்தை விட பொறுமையே முக்கியம். கட்சியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை. தமிழக பாஜக தலைவர் தேர்தல் எப்போது நடந்தாலும், அதில் நான் இருக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : ’வாழ்த்துக்கள்.. God Bless’..!! அஜித்துக்கு வாழ்த்து சொன்ன ரஜினி..!! குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல்..!!