fbpx

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது அதிமுக..!! எடப்பாடி தலைமையிலான கூட்டத்தை தொடர்ந்து அதிரடி அறிவிப்பு..!!

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் ஜெயலலிதா ஆகியோர் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அதிமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்காக சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பாஜகவுடனான கூட்டணியை தொடர்வதா அல்லது முடித்துக்கொள்வதா என விவாதிக்கப்பட்டது. இறுதியில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, அண்ணா மற்றும் ஜெயலலிதா குறித்தும், எடப்பாடி பழனிசாமி குறித்தும் தொடர்ந்து அவதூறாக பேசி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அனைத்து தொண்டர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம்“ என்று தெரிவித்தார்.

Chella

Next Post

#நன்றி_மீண்டும்வராதீர்கள்: 2 கோடி தொண்டர்களின் விருப்பம்..! கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக…

Mon Sep 25 , 2023
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் நிலவி வந்தது. அண்ணாவை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஆவேசமாக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்த நிலையில், […]

You May Like