fbpx

அதிமுக பொதுக்குழு வழக்கு..! முந்திக் கொண்ட எடப்பாடி..! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு மனு..!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது.

அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கமும், எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானமும் செல்லும் என்றும் இரு நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பின்னடைவாக கருதப்பட்டது.

அதிமுக பொதுக்குழு வழக்கு..! முந்திக் கொண்ட எடப்பாடி..! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு மனு..!

இதையடுத்து, இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதங்களை கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

Chella

Next Post

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை படையினர் தாக்குதலால் பரபரப்பு…படுகாயங்களுடன் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

Sun Sep 4 , 2022
காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காரைக்கால் பகுதியில் இருந்து மீனவர்கள்கோடியக்கரை தோப்புத்துறை பகுதியில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரும்பைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காரைக்கால் மீனவர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் காரைக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து […]

You May Like