fbpx

அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக 4 பேர் நியமனம்..!! – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

அதிமுக அமைப்புச் செயலாளர்களாக நால்வரை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர்கள் வேலுசாமி மற்றும் முல்லைவேந்தன், முன்னாள் எம்.பி. மைத்ரேயன், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி ஆகிய நால்வர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணரான மைத்ரேயன், 2002ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக 3 முறை எம்.பி.யாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது.2022ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது அணியை சேர்ந்தவர்கள் நீக்கப்பட்டபோது மைத்ரேயனும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் அதிமுக-வில் இணைந்த மைத்ரேயனை, அதிமுக அமைப்புச் செயலாளர்களாக எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more : மகளின் உயிர் பிரிவதை, ஒன்றாக நின்று வேடிக்கை பார்த்த குடும்பம்.. நெஞ்சை பதற வைக்கும் ஓர் கொடூர சம்பவம்!!!

English Summary

AIADMK general secretary Edappadi Palaniswami has ordered the appointment of four people as organizational secretaries.

Next Post

"என்னயவே டார்ச்சர் பண்ணுவியா நீ" தன்னை சந்தேகப்பட்ட கணவனுக்கு மனைவி செய்த காரியம்..

Tue Jan 28 , 2025
woman killed her husband who tortured her

You May Like