அதிமுகவில் பொதுக்குழு நடத்தி எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது. அதேபோல் அதிமுக தலைமை அலுவலக சாவி இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் அவருக்கு சாதமாகவே ஐகோர்ட் தீர்ப்பு வெளியானது.
இந்த நிலையில் இன்று இரவு எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். மூன்று நாட்கள் அவர் டெல்லியில் இருப்பார் என்று கூறப்படுகிறது. அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரும் செல்கின்றனர் . டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான கோர்ட் தீர்ப்பை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.