மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட்.. கோவாவில் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை..

கோவாவில் மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால், பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.. இதே போல் டெல்லி, மகாராஷ்டிரா, அசாம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.. அந்த வகையில் கோவாவில் பெய்து வரும், தொடர் மழையால் பல சாலைகள் மற்றும் பாலங்கள் நீரில் மூழ்கியதால், கடலோர மாநிலத்தின் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவாவில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. 9,10 ஆகிய தேதிகளில் வரை மிகக் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.. நிலைமையைக் கருத்தில் கொண்டு, 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்படும் என்றும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள் நடத்தப்படும் என கோவா அரசின் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், கனமழையால் ஏற்படும் எந்தச் சூழலையும் சமாளிப்பதற்கும் கள இயந்திரங்களைச் செயல்படுத்த, பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கோவா அரசு தெரிவித்துள்ளது..

இதுகுறித்து கோவா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் – பலவீனமான மரங்கள்/கட்டமைப்புகள் அல்லது நிலச்சரிவு மற்றும் பாறை வீழ்ச்சியால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு அருகில் தங்குவதைத் தவிர்க்கவும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். தண்ணீர் தேங்கும் பிரச்னை உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.. மின்சாரத்தை கையாளும் போது முன்னெச்சரிக்கையாக இருக்கவும், நீர்நிலைகளுக்குள் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது..” என கூறப்பட்டுள்ளது.

Maha

Next Post

பிரபல நடிகருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை...! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

Fri Jul 8 , 2022
நடிகரும் அரசியல்வாதியுமான ராஜ் பப்பருக்கு லக்னோவில் உள்ள எம்.பி/எம்.எல்.ஏ நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான இவர் மீது 1996-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்போது சமாஜ்வாடி கட்சியின் தலைவராக இருந்த ராஜ் பாபர், அரசு அதிகாரியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறைத்தண்டனையுடன், நடிகருக்கு 8500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் பணிகளில் தலையிட்டதற்காக […]

You May Like