அதிமுகவின் பொது செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், நேற்று இதற்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பமானது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கு நடுவே பொது செயலாளர் தேர்தலில் எதிர்த்து பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு ஒன்று தொடுத்திருந்தார் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கி இருந்தார்.
ஆகவே இந்த வழக்கு இன்று நீதிபதி குமரேஷ்பாபு முன்னர் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி எஸ் ராமன், ஸ்ரீராம் உள்ளிட்டோர் வாதம் செய்தனர். அப்போது ஜெயலலிதா தான் கட்சியின் நிரந்தர பொது செயலாளராக இருக்க வேண்டும் எனவும், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது எனவும் தேர்தல் ஆணையம் இதுவரையில் இடைக்கால பொதுச் செயலாளராக யாரையும் அங்கீகாரம் செய்யவில்லை என்றும் வாதம் செய்யப்பட்டது.
அத்துடன் புதிய விதிகள் மாற்றப்பட்டு இருப்பதாகவும், புதிய விதிகளின்படி 5 வருடங்கள் தலைமைக் கழக நிர்வாகிகளாக இருப்பவர் தான் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என்றால் கட்சியின் அடிப்படை தொண்டன் போட்டியிட இயலாத சூழ்நிலை ஏற்படும், இது எம்ஜிஆர் கொள்கைக்கு எதிராக நடக்கிறது செய்யப்பட்டது அத்துடன் 1.5 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை என்ற வாதமும் முன் வைக்கப்பட்டது.
ஆகவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அத்துடன் எதிர் தரப்பிற்கு பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும், இல்லையெனில் ஒருவரே தாக்கம் செய்து ஒருவரையே ஒரு மனதாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்றும் வாதிடப்பட்டது.