fbpx

எடப்பாடியிடம் அதிமுக தலைமை அலுவலகம்..! உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் ஓபிஎஸ் தரப்பு..!

அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிமுக அலுவலகத்தின் சாவியை உடனடியாக ஒப்படைக்க உத்தரவிட்டது. மேலும், விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில் தனது கட்சி தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அங்கு அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்திய நீதிபதி, அலுவலகத்திற்கு தேவையான போதுமான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

எடப்பாடியிடம் அதிமுக தலைமை அலுவலகம்..! உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் ஓபிஎஸ் தரப்பு..!

இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் அளித்த பேட்டியில், ‘அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஓ உத்தரவை நேரடியாக ரத்து செய்தது தவறு. வருவாய் கோட்டாட்சியரின் அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்து கொண்டுள்ளது. மேல்முறையீடு செய்ய தகுந்த வழக்கு இது’ என்று தெரிவித்தார். மேலும், சுவாதீனம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து வாதிடப்படாமல் இருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பித்தது ஏற்று கொள்ள முடியாது எனவும், உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செல்ல உள்ளதாகவும் அறிவித்தார்.

Chella

Next Post

தங்கைக்காக பழி வாங்க வந்த வாலிபர்... ஜஸ்ட் மிஸ் ல் தப்பிய மத போதகர்...!

Wed Jul 20 , 2022
திருநெல்வேலி நீதிமன்றத்தில் வைத்து ஆஜராக வந்த மதபோதகரை வெட்ட முயன்ற வாலிபரை காவல்துறையினர், துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். நெல்லை பாளையங்கோட்டையிலிருந்து தூத்துக்குடி ரோட்டில் நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள மகிளா நீதிமன்றத்தில், ஒரு வழக்கு விசாரணைக்காக நெல்லை அருகே உள்ள தாழையூத்து பகுதியை சேர்ந்த மதபோதகர், ஜோஸ்வா இமானுவேல் என்பவர் வந்திருந்தார். அந்த மதபோதகர் கோர்ட்டில் இருந்தபோது வாலிபர் ஒருவர் திடீரென்று மறைத்து […]
ஆசிரியையை 101 முறை கத்தியால் குத்திக்கொன்ற முன்னாள் மாணவன்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

You May Like