மதுரையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. அதோடு அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் வெளியிட்டார். அத்தோடு மாநாட்டிற்கான பணிகளை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் தான் மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி நடைபெற இருக்கின்ற அதிமுக மாநாடு தொடர்பாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது. அப்போது மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் என்னென்ன என்பது தொடர்பாக அவர் விவாதம் செய்திருக்கிறார். அத்துடன் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மாநாட்டின் பங்கேற்றுக் கொள்வோர் தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
மாநாடு பணிகள் நடைபெறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கின்ற குழுவினருடனும் அவர் ஆலோசனை நடத்திருக்கிறார். முன்னதாக மதுரையில் நடைபெற இருக்கின்ற அதிமுகவின் பொன் விழா மாநாடு அரசியலில் திருப்புமுனையை உண்டாக்கும் என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.