fbpx

அதிமுக கலவர வழக்கு..! வீடியோ பதிவுகள் சேகரிப்பு..! சிக்கும் முக்கியப் புள்ளி..! ஐகோர்ட் அதிரடி

அதிமுக அலுவலக கலவர வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புகளுக்கு மாற்ற கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பான 3 வழக்குகளையும் சிபிசிஐடி-க்கு மாற்றி இருப்பதாக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டு, விசாரணை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதிமுக கலவர வழக்கு..! வீடியோ பதிவுகள் சேகரிப்பு..! சிக்கும் முக்கியப் புள்ளி..! ஐகோர்ட் அதிரடி

இந்நிலையில், வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறி, விசாரணை துரிதப்படுத்தும்படி சிபிசிஐடி-க்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி சி.வி.சண்முகம் கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 7ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. விசாரணை நிலை குறித்து செப்டம்பர் 19ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை விரைவாக முடிக்க அறிவுறுத்திய நீதிபதி, விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். சேர்க்கைக்கு விரைவில் விண்ணப்பம் … ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம்….

Tue Sep 13 , 2022
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவு ஓரிரு நாளில் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 70 மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்.பி.பி.எஸ். , பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் நடத்தி வருகின்றது. இந்த கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வகள் நிறைவடைந்ததை அடுத்து 7ம் தேததி முடிவுகள் வெளியானது. மருத்துவப் படிப்புகளில் மாணவர்சேர்க்கை நடத்துவதற்கா […]

You May Like