தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்..
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த உடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்றக்கோரி ஏற்கனவே பலமுறை முறையிடப்பட்டுள்ளது.. ஆனால் இதுகுறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறி கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.. அப்போது சபாநாயகர் அப்பாவு, அரசினர் தீர்மானம் உள்ளதால் கவன ஈர்ப்பு தீர்மான நாளை எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறியதால், அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்..
மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது நேரலையில் வருவதில்லை என்றும், அமைச்சர்கள் பதிலளிப்பது மட்டும் எப்படி நேரலையில் வருகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.. நேரத்திற்கு ஏற்றபடி விதிகளை தளர்த்தி திமுக அரசு ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும், மேலும் எதிர்க்கட்சியினர் பேசுவது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதை எதிர்த்தும் அதிமுக வெளிநடப்பு செய்வதாகவும் அறிவித்து தமிழக சட்டப்பேரையில் இருந்து இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்..