fbpx

’அதிமுக படுதோல்வி அடையும்’..!! ’இரட்டை இலையை உடனே முடக்குங்கள்’..!! தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு புதிய மனு..!!

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்குமாறு தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் புகழேந்தி புதிய மனு அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சுமார் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி. தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை தங்களுக்குத் தான் கிடைக்கும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இருப்பினும், சமீபத்தில் இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று ஓபிஎஸுக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புதிய கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை முடக்குமாறு ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்தி அதிமுக படுதோல்வி அடைவதைத் தொண்டர்கள் விரும்பவில்லை என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பில் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Read More : தமிழகத்தில் புதிய கட்சி உதயம்..!! அதிமுகவை மீட்டெடுக்கவே இந்த முடிவு..!!

Chella

Next Post

இந்தியாவை உளவு பார்க்கும் சீனா

Thu Mar 21 , 2024
கடலில் ஆய்வு செய்வதாகக்கூறி சீன ஆய்வுக்கப்பல்களுக்கு இலங்கை மீண்டும் அனுமதி அளித்துள்ளதால், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கடந்த நவம்பர் மாதம் சீனாவின் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கப்பல் நிலை நிறுத்தப்பட்டதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்தது. இதையடுத்து சர்வதேச ஆய்வுக்கப்பல்கள் தங்களது துறைமுகங்களில் நிறுத்த இலங்கை அரசு ஒரு ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டதுடன், சீன கப்பலை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் இலங்கை அரசுக்கு […]

You May Like