fbpx

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளின் புகைப்படங்கள் வெளியீடு!

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளின் படங்களை மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக ரூ.1977.8 கோடி மதிப்பீட்டில் ஜெய்கா என்ற ஜப்பானிய நிதி நிறுவனத்துடன் 2021ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. மொத்த மதிப்பீட்டில் 82% சதவீத தொகை, அதாவது ரூ.1627.70 கோடியை ஜெய்கா நிறுவனம் கடனாக வழங்கும். எஞ்சிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

5 ஆண்டுகளை கடந்தும் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நடைபெறாமல் இருந்து வந்ததால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனைதொடர்ந்து கடந்த மார்ச் 14 ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தனியார் கட்டுமான நிறுவனமான L&T நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்நிலையில், கட்டுமானப் பணிகள் நடைபெறும் புகைப்படங்களை, மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் அதன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. 950 படுக்கைளுடன், பத்து தளங்களுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக உள்ளது. முதல் கட்டமாக ரூ.10 கோடி மதிப்பீட்டில், 5 கி.மீ. சுற்றளவுக்கு 12 அடி உயர காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை பகுதியில் ரூ.21 கோடியில், 6 கிலோ மீட்டர் சாலை போடும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

Next Post

போர் பதற்றம் : இஸ்ரேலுக்கு செல்லும் இந்திய விமானங்கள் ரத்தாக வாய்ப்பு !

Sun Apr 14 , 2024
இஸ்ரேல் -ஈரான் போர் பதற்றம் காரணமாக விமான போக்குவரத்து பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விமானத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது […]

You May Like