கடந்த 24 ஆம் தேதி ஏர் இந்தியாவின் AIC 866 விமானம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு சென்றது. இந்த விமானத்தில் ராம் சிங் என்ற பயணியும் சென்றுள்ளார் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் சமையல்காரர் ஆக இவர் பணிபுரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர் அந்த ஏர் இந்தியா விமானத்தின் 17F இருக்கையில் அமர்ந்து சென்ற நிலையில், விமானம் நடுவானில் பயணம் செய்து கொண்டிருந்தபோது பயணிகள் இருக்கைகள் இருக்கும் பகுதியிலேயே மலம், சிறுநீர் உள்ளிட்டவற்றை கழித்துள்ளார். அதோடு எச்சில் துப்பி சக பயணிகள் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டுள்ளார். இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தனர் உடனடியாக அவர் பயணிக்கு எச்சரிக்கை வழங்கியுள்ளார்.
அதோடு விமானத்தின் கேப்டன் மற்றும் ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு தகவல் வழங்கினார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன் அங்கே காத்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பிரச்சனை செய்த பயணி ராம் சிங்கை கைது செய்தனர் அவர் மீது இபிகோ 294, 510 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது