சவுதி அரேபியாவில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, ரியாத், ஜெட்டா, தம்மாம், மதீனா ஆகிய நான்கு முக்கிய நகரங்களுக்கான விமானச் சேவைகள் அக்டோபர் 24, 2026 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியத் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறிப்பிட்ட நான்கு நகரங்களுக்கான விமான ரத்து நடவடிக்கை அக்டோபர் 24-ம் தேதி உட்பட தொடரும் […]

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபாய் விமானத்தில், துணை விமானி கேப்டனை கத்தியால் குத்திவிட்டு விமானத்தைக் கைப்பற்ற முயன்றதாக எழுந்துள்ள புகார் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. போயிங் 737 மேக்ஸ் 8 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், அவசரமாக சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, ஓமன் நாட்டைச் சேர்ந்ததாகக் […]

உள்நாட்டு விமானங்களுக்கு ரூ.7,500 முதல் ரூ.18 ஆயிரம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விமான ஊழியர்களுக்கான புதிய பணி நேர வரம்பு விதிகளை இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ)கடந்த ஆண்டே அறிவித்திருந்தது. பயணிகள் பாதுகாப்பு மற்றும் விமான பைலட்களின் நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட இந்த விதிகள் கடந்த மாதம் அமலுக்கு வந்தன. பணி நேரம் குறைந்ததால் இண்டிகோ […]

Southwest Airlines விமானத்தில் பெண் ஒருவர் மதுபோதையில் சக பயணியின் தலை முடியை பிடித்து சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபகாலமாக விமானப் பயணத்தில் சிலர் செய்யும் சேட்டைகள் அத்துமீறி சென்று கொண்டிருக்கின்றன. இப்படித்தான் அண்மையில் அமெரிக்கா செல்லும் விமானம் ஒன்றில், பயணி ஒருவர் விமானி அறைக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அந்த சம்பவத்தில் விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் விபத்தும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. இதேபோல, அமெரிக்காவில் இருந்து […]

லண்டனின் ஹீத்ரோவில் இருந்து சென்னை உறப்பட்ட விமானத்தில் நடுவானில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரிட்டிஷ் ஏர்வேஸின் BA35 என்ற விமானம், போயிங் 787-8 ட்ரீம்லைனர் மூலம் இயக்கப்பட்டது. இது ஹீத்ரோவிலிருந்து புறப்பட்டு ஒரு மணிநேரம் கழித்து, நடு வானில் புகை வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் ஹீத்ரோவுக்கே திரும்பி வந்தது. விமானம் டோவர் ஜலசந்தி பகுதியில் பல முறை சுற்றி வட்டமிட்ட பின்னர் பாதுகாப்பாக […]