fbpx

மக்களே…! போலியான விளம்பரம் மூலம் வேலைவாய்ப்பு…! எச்சரிக்கை கொடுத்த மத்திய அரசு…!

இந்திய விமான நிலைய ஆணையம் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால், ஏஏஐ என்ற பெயரில் வேலைவாய்ப்புக்கு நேர்மையற்ற சக்திகளால் போலியான விளம்பரம் செய்யப்படுவது குறித்து பொதுமக்களை எச்சரிக்க ஏஏஐ அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. முன்னணி நாளிதழ்களில் விளம்பரம் செய்தல், உள்ளூர் காவல் நிலையங்களில் புகார் அளித்தல், அந்தந்த மாநில டி.ஜி.பி.,க்கள் மற்றும் மத்திய குற்றப்பிரிவு டி.ஜி.பி.,க்களுக்கு புகார் அளித்தல் என நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் இதுபோன்ற மோசடி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் தடையின்றி தொடர்கின்றன.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெயரில் வேலை வாய்ப்புகள் குறித்த நேர்மையற்ற சக்திகளின் போலியான மற்றும் தவறான விளம்பரங்களுக்கு இரையாக வேண்டாம் என்று இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை செய்கிறது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.aai.aero என்பதிலும் முன்னணி செய்தித்தாள்களிலும் மட்டுமே ஏஏஐயின் வேலை வாய்ப்புகள் குறித்த விளம்பரம் வெளியிடப்படுகிறது .

மொபைல் / வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திகள் மூலம் ஏதேனும் வேலை வாய்ப்பு பற்றிய விளம்பரங்கள், தகவல்கள் கிடைத்தால், அதை உடனடியாக காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கவும். இந்த விஷயத்தில் தனிநபர் எதிர்கொள்ளும் எந்தவொரு இழப்புகளுக்கும் / சிக்கல்களுக்கும் ஏஏஐ பொறுப்பேற்காது”. பொதுமக்கள் இதுபோன்ற தவறான தகவல்களுக்கு இரையாக வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஷாக்கிங் ரிப்போர்ட்..!! பணியிடங்களில் ஆண்டுக்கு 30 லட்சம் தொழிலாளர்கள் உயிரிழப்பு..!!

Wed Nov 29 , 2023
உலகம் முழுவதும் பணியிடங்களில் நேர்ந்த விபத்து உள்ளிட்ட காரணங்களால் ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பணியிடங்களில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில், பணியிடங்களில் நிகழ்ந்த விபத்து, நோய்த் தொற்று காரணமாக ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் மட்டும் 63% மரணங்கள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த […]

You May Like