fbpx

இந்த வாகனங்களை இயக்க தடை..! காற்று மாசு ஏற்படுவதால் அரசு அதிரடி அறிவிப்பு…

டெல்லியில் பெருகி வாகனங்களால், காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து பிஎஸ் 3, மற்றும் பிஎஸ் 4   வாகனங்களுக்கு தடை விதித்து  அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுதும், கடந்த 2017  முதல் பி.எஸ் 4 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பி.எஸ் என்பது, பாரத் ஸ்டேஜ் என்பதின் சுருக்கம் ஆகும். வாகனங்கள் வெளியிடும் புகையால், மாசு ஏற்படுவதை தடுக்க, இந்தியாவில் 2000ம் ஆண்டில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில்  டெல்லியில் காற்று மாசு அளவு 434 -ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) காற்று மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்த அறிவுறுத்திய நிலையில், இன்று முதல், பிஎஸ்.3 பெட்ரோல் வாகனங்களுக்கும், பிஎஸ்.-4  டீசல் வாகனங்களுக்கும்  தடை  விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தற்காலிகமானது தான் எனவும் வரும் வெள்ளிக்கிழமை வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

பழைய போனை எக்ஸ்சேஞ்ச் பண்ணா ரூ.599-க்கு புது HD ஸ்மார்ட்போனா? ஏ எப்புட்றா...

Tue Jan 10 , 2023
ஆன்லைனில் போன் வாங்க விரும்புகிறீர்களா? அப்போ இன்பினிக்ஸ் மொபைல நீங்க ரொம்பவே குறைந்த விலைக்கு நீங்கள் வாங்க முடியும். Infinix Smart 6 HD ஸ்மார்ட்போன அந்த நிறுவனம் ரூ.5,799க்கு கொடுக்கிறாங்க. முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? எக்ஸ்சேஞ்ச் சலுகையில இந்த போனில் தள்ளுபடியும் ரூ.5,200 தள்ளுபடி கொடுக்கிறாங்க. அதாவது. ரூ.599-க்கு நீங்க இந்த அழகான ஸ்மார்ட் போன வீட்டுக்கு எடுத்துட்டு போகலாம்… ஆனா நீங்கள் கொடுக்கும் பழைய போனின் […]

You May Like