தாய்லாந்தைச் சேர்ந்த விமான நிறுவனமான ஏர் ஏசியா (AirAsia) திருச்சியில் இருந்து பாங்காக் செல்லும் விமானப் பயணிகளுக்கு சலுகையை அறிவித்துள்ளது.
ஏர் ஏசியா திருச்சியில் இருந்து பாங்காங்கிற்கு நேரடி விமான சேவையை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்குகிறது. கடந்த செப்டம்பர் மாதம்தான் இந்த வழித்தடத்தில் நேரடி விமான சேவையை ஏர் ஏசியா தொடங்கியது. செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் பாங்காக்-திருச்சி-பாங்காக் விமானங்களில் பயணிக்கலாம். இந்நிலையில், பயணிகளைக் கவர மிகவும் கவர்ச்சிகரமான சலுகையை அறிவித்துள்ளது.
இந்தச் சலுகை Zero Base Fare என்று அழைக்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணத்தை விரும்பும் சுற்றுலா பிரியர்கள் ஏர் ஏசியாவின் இந்த Zero Base Fare சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம். வழக்கமாக திருச்சியில் இருந்து பாங்காக் செல்ல விமானம் டிக்கெட்டின் அடிப்படை கட்டணம் ஒரு நபருக்கு ரூ.25,000 வரை ஆகும். ஆனால், இப்போது ஏர் ஏசியா இந்தக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்து இதர வரிகளை மட்டும் செலுத்திவிட்டு பயணிக்க அனுமதிக்கிறது.
டிக்கெட் கட்டணம் இல்லாமல், விமான நிலைய வரி, எரிபொருள் வரி மற்றும் இதர சிறிய கட்டணங்களை மட்டும் செலுத்தினால் ஏர் ஏசியாவின் பாங்காக் விமானத்தில் டிக்கெட் கிடைத்துவிடும். ஏர் ஏசியாவின் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் புக் செய்யும்போது இந்த ஆஃபரைப் பெறலாம்.
Read more ; பெண்களுக்கு வழக்கமான மகளிர் மருத்துவ பரிசோதனைகள் ஏன் அவசியம்..? – மருத்துவர்கள் விளக்கம்