fbpx

தனுஷுக்கு முன்பு 2 பேரை காதலித்த ஐஸ்வர்யா..!! ஒருவர் தற்கொலை..!! பரபரப்பை கிளப்பிய பயில்வான்..!!

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன்னுடைய கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்ததில் இருந்தே, அவ்வபோது ஐஸ்வர்யாவின் பழைய காதல் மற்றும் காதலர்கள் பற்றிய தகவல்கள் சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன், இதுவரை யாருக்கும் தெரியாத ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 2-வது காதலர் குறித்த தகவலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். ஐஸ்வர்யா தனுஷை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, நடிகர் சிம்புவை காதலித்ததாக கூறப்பட்டது. மேலும், இது குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகி உள்ளன. ஆனால், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் என கூறப்பட்டது. ஐஸ்வர்யாவை மறக்க முடியாமல், சிம்பு மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஐஸ்வர்யா விவகாரத்தால் தான் தனுஷ் – சிம்பு ஆகியோரின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் ஒரு முறை கூட சிம்பு மற்றும் தனுஷ் இதுகுறித்து வெளிப்படையாக பேசியதே இல்லை.

தற்போது சிம்புவை அடுத்து ஐஸ்வர்யா மற்றொருவரை காதலித்ததாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் புதிய குண்டை தூக்கிபோட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன். மேலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 2-வது காதலர் குறித்து கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன், அந்த நபர் ஒரு தொழிலதிபரின் மகன் என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் தான் ஐஸ்வர்யா – தனுஷ் குறித்து காதல் கிசுகிசு எழ, நேரடியாக கஸ்தூரி ராஜாவுக்கே போன் போட்டு, தன்னுடைய மகளை, உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதமா என ரஜினி கேட்க, கஸ்தூரி ராஜாவும் ஓகே சொன்னதால் இந்த திருமணம் நடந்ததாக ரஜினிகாந்த் அப்போது சொன்ன விஷயத்தை நினைவு கூர்ந்து பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி அனைவரும் பொறாமை கொள்ளும் வகையில் வாழ்ந்து வந்ததும், இவர்களின் காதலுக்கு அடையாளமாக லிங்கா மற்றும் யாத்ரா ஆகிய இரு மகன்கள் பிறந்தனர். அதே போல் தனுஷின் அசுர வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்து உதவினார் ஐஸ்வர்யா என்றால், அதனை யாராலும் மறுக்க முடியாது. இந்த அழகு ஜோடி மீது யார் கண் பட்டதோ கடந்த ஆண்டு திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற உள்ளதாக அறிவித்தனர். ஆனால், தற்போது வரை இவர்களுடைய விவாகரத்து குறித்து மனு தாக்கல் செய்யப்படாத நிலையில், தனுஷுக்கு மிகவும் நெருக்கமான இயக்குனர் சுப்பிரமணியன் சிவா, ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் மீண்டும் கருத்து வேறுபாடை மறந்து பேசி வருவதாகவும், அடுத்த ஆண்டு தங்களுடைய பிள்ளைகளுக்காக இணைந்து வாழ்வார்கள் என கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். சில பாசிட்டிவான தகவல்களை கூறினாலும், தேவையில்லாமல் ஐஸ்வர்யாவின் பழைய காதல் கதைகளை கிளறி உள்ளது தான் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

Chella

Next Post

லிவிங்கில் வாழ்ந்த பெண்ணின் சடலத்துடன் 2 நாட்கள் குடும்பம் நடத்திய இளைஞர்..!! தீவிர விசாரணையில் போலீஸ்..!!

Wed Apr 12 , 2023
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை அடுத்த லாய்ப்பூர் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் பணிபுரிந்து வந்த பசாந்தி யாதவ் என்ற பெண்ணுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பசாந்தி வெளியே வராததால் இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கோபியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், பசாந்திக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில், கோபியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் […]

You May Like