விஷாலின் ஆக்ஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் தான், ஐஸ்வர்யா லட்சுமி. மலையாள நடிகையான இவர், தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்து ரசிகர்களை வென்றார். பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக இருந்தது. சமுத்திரக் குமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்த இவரை பலரும் பாராட்டினர். இந்த படத்தின் மூலம், இவர் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார். இந்த படத்திற்கு பின, இவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. இந்நிலையில், தக் லைஃப் என்ற தமிழ் திரைப்படத்தில் இவர் தற்போது நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கி இந்த படத்தில், கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர உள்ள நிலையில், இப்படத்திலும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு நல்ல ரோல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 34 வயதாகும் ஐஸ்வர்யா லட்சுமி, திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.25 வயது வரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டதாகவும், ஆனால் திருமணமான தம்பதிகள் சந்தோஷமாக இல்லாததைக் கண்டு திருமணம் வேண்டாம் என முடிவெடுத்ததாகவும் ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார். மேலும், நீண்ட யோசனைக்குப் பிறகு தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். நடிகர் அர்ஜுன் தாஸுடன் ஐஸ்வர்யா லட்சுமி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவின. ஆனால், அதற்க்கு இருவரும் மறுப்பு தெரிவித்தனர்.
திருமண்ம் செய்துகொள்ள சொன்ன என் தாயிடம் மேட்ரிமோனியில் ஒரு கணக்கை தொடங்க சொன்னதாகவும், ஆனால் அதில் தனது புகைப்படத்தை பார்த்த பலரும் அது போலி என நினைத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
Read more: உடம்பில் சாயம்!! வெயிலில் பட்டினியாக பிச்சை எடுக்கும் பிஞ்சு குழந்தை… நெஞ்சை ரணமாக்கும் வீடியோ