fbpx

திடீரென சென்னை வந்த அஜித்..!! கலைஞர் விழாவில் பங்கேற்கும் விஜய்..!! பரபரப்பில் திரையுலகம்..!!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய், தற்போது தளபதி 68 படத்தில் பிஸியாக இருக்கிறார். அதற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், 2ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.

இதனால், இன்று நடைபெறவுள்ள கலைஞர் 100 விழாவிற்கு விஜய் வர வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. ஆனால், சமூக வலைதளங்களில் விஜய் அந்த விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஒட்டுமொத்த திரையுலகமே இன்று மாலை அந்த விழாவில் ஒன்று கூட இருக்கின்றனர். விஜய், அஜித் மட்டும் சந்தேகத்தில் இருக்கின்றனர். அஜித் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானில் இருப்பதாக நேற்றைய தகவல் கூறுகிறது. ஆனால், அவரும் திடீரென இன்று சென்னை வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஏற்கனவே நடிகர்கள் ஒன்று சேர்ந்து கலைஞருக்கு முன்பு ஒரு விழா எடுத்து கொண்டாடினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதில் கூட அஜித் பேசியது மிகவும் வைரலானது. அந்த நேரத்தில் விஜய் பேசிய ஒரு வீடியோ இன்று வைரலாகி வருகிறது. அதில், ”கலைஞர் நகர் என்று ஆரம்பிக்கப் போவதாக கேள்விப்பட்டேன். அதுமட்டும் போதாது. அந்த இடத்தில் கலைஞருக்கு ஒரு சிலையும் வைக்க வேண்டும். அவரது 100-வது வயதில் ஒரு விழா எடுத்து அந்த விழாவில் கலைஞருடன் சேர்ந்து நானும் அந்த சிலையை ரசிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது.

Chella

Next Post

"என்னென்ன பைத்தியக்காரத்தனம் எல்லாம் பண்றாங்க.."! நாம் தமிழர் நிர்வாகியின் பீர் குடிக்கும் போட்டி.! காவல்துறை நடவடிக்கை.!

Sat Jan 6 , 2024
பீர் குடிக்கும் போட்டி தொடர்பான போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் பொதுமக்களிடம் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பகுதிக்கு அருகில் உள்ள வாண்டான் விடுதி என்ற பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி. இவர் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்நிலையில் பீர் குடிப்பது தொடர்பாக போஸ்டர் ஒன்றை தயார் […]

You May Like