fbpx

அஜித் ரசிகர்கள் ஷாக்: லீக் ஆனது துணிவு படத்தின் பாடல்!!!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் 3-வது படம் இது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் கதை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் அப்டேட் கேட்டு இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர் அஜித் ரசிகர்கள், இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கையில் துப்பாக்கியுடன் அஜித் இருக்கும் துணிவு படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. மேலும் படத்தின் “சில்லா சில்லா” பாடல் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளர் ஜிப்ரான் அறிவித்திருந்தார். ஜிப்ரான் இசையமைத்து இருக்கும் அந்த பாடலை அனிருத் தான் பாடி இருக்கிறார்.

இந்நிலையில் சில்லா சில்லா பாடல் தற்போது இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இது ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்ப்படுத்தி இருக்கிறது. “என்னைக்குமே படைச்சவன் துணை நமக்கு.. மனசுல போராட துணிவிருக்கு” என வரிகள் வரும் 10sec பகுதி லீக் ஆகி தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த பாடல் கேட்பதற்கு செம்ம மாஸாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Kathir

Next Post

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் காலியிடங்கள்..!! வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

Wed Dec 7 , 2022
தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் (Ration Shop) காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு நாள் வெளியாகியுள்ளது. அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி..? * விண்ணப்பித்தில் தெரிவித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு, அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க ஆள்சேர்க்கை அலுவலகம் மூலம் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான பதிவு எண்/கடவு சொல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. * இந்த பதிவு எண்/கடவுச் சொல் […]

You May Like