தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித், அஜித்தின் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி படம் வெளியானது. 2 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் அஜித் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடந்த 6-ம் தேதி வெளியான விடாமுயற்சி அஜித் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. அவரின் ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதை தொடர்ந்து அஜித் ரசிகர்களின் கவனம் குட் பேட் அக்லி படத்தின் மீது திரும்பி உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு தொடங்கி சமீபத்திய அப்டேட் வரை அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தை அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இதனால் இன்று எக்ஸ் பக்கத்தில் GBU என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது. அதன்படி சரியாக 7.03 மணிக்கு இந்த படத்தின் டீசர் வெளியானது. மாஸான சண்டை காட்சிகள், தெறிக்கவிடும் இசை.. பஞ்ச் வசனங்களுடன் நிறைந்துள்ள இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.