fbpx

Ajith | ஷாலினிக்கு என்ன ஆச்சு..? ஓடோடி வந்த அஜித்..!! மருத்துவமனையில் அறுவை சிகிச்சை..!!

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில், நேற்று திடீரென சென்னை திரும்பினார். அதாவது, அஜித்தின் மனைவி ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் அவரை பார்ப்பதற்காக தான் அஜித் சென்னை திரும்பினார் என்றும் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இந்நிலையில், சற்றுமுன் ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அறுவை சிகிச்சை முடிந்து உட்கார்ந்திருக்கும் ஷாலினி கையை அன்புடன் அஜித் பிடித்து இருப்பது போன்று உள்ளது. இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’அன்பு எங்கும் பரவட்டும்’ என்று ஷாலினி பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த பதிவுக்கு கமெண்ட்களாக விரைவில் ஷாலினி முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த பதிவில் அவரது கையில் மருத்துவமனையின் அடையாள அட்டையை பார்க்கும் போது ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பது உண்மைதான் என தெரிய வருகிறது.

Read More : புற்றுநோயை உண்டாக்கும் பானிபூரி..!! தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை..!! உணவு பிரியர்கள் அதிர்ச்சி..!!

English Summary

Shalini posted a picture of herself in the hospital on her Instagram page.

Chella

Next Post

விக்கிரவாண்டியில் ஓட்டுக்கு லஞ்சம்..!! கையும் களவுமாக சிக்கிய திமுக..!! வேட்பாளரை தகுதி நீக்கம் பண்ணுங்க..!! சீறிய அன்புமணி..!!

Wed Jul 3 , 2024
Anbumani Ramadoss has insisted that the DMK candidate should be disqualified as the Vetti-Sales kept by the DMK to bribe the votes in the Vikravandi by-election have been confiscated.

You May Like