fbpx

டெல்லி அலுவலகத்தில் பாஜகவில் இணைந்த இரண்டு முக்கிய அரசியல் புள்ளிகள்…!

சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் இந்தர் இக்பால் சிங் அத்வால், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ள இந்தர் இக்பால் அத்வால், 2004 முதல் 2009 வரை 14வது மக்களவையின் துணை சபாநாயகராகவும், பஞ்சாப் சட்டசபையின் சபாநாயகராகவும் பணியாற்றிய சரஞ்சித் சிங் அத்வாலின் மகன் ஆவார்.

அத்வாலுடன், அவரது இளைய சகோதரர் ஜஸ்ஜீத் சிங் அத்வால் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த பிற தலைவர்களும் டெல்லி தலைமையக அலுவலகத்தில் பாஜகவில் இணைந்தனர். பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்துகளை உண்மையான அர்த்தத்தில் யாராவது செயல்படுத்துகிறார்களா என்றால் அது பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் உள்ள மத்திய அரசுதான். மத்தியில் ஆளும் அரசு பல்வேறு திட்டங்களால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைகிறேன் என்று அத்வால் செய்தியாளர்களிடம் கூறினார்.

Vignesh

Next Post

அட கடவுளே...! தலைநகரை மீண்டும் வாட்டி எடுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு...! நேற்றைய எண்ணிக்கை எவ்வளவு...?

Mon Apr 10 , 2023
டெல்லியில் நேற்று ஒரே நாளில் 699 பேருக்கு புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வழக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு நேற்று 699 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 25.98 சதவீதமாக உயர்ந்தது. சுகாதாரத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.டெல்லியில் கடந்த சில மாதங்களாக புதிய […]
அமெரிக்கா டூ தமிழ்நாடு..! தீவிரமாக பரவும் கொரோனா திரிபு..! மருத்துவர்கள் எச்சரிக்கை

You May Like