Election 2024: பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகவே என மோடி(Modi) நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். Election 2024: இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. இதன்படி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மேலும் […]

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியா முழுவதும் வலுவாக இருந்தாலும் தமிழகத்தில் பின்தங்கியே இருக்கிறது. இதனை மாற்றுவதற்காக பாஜக தலைமையும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவின் வெற்றிக்காக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் […]

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம் ராமநாதபுரத்தில் தொடங்கிய இவரது பயணத்தை, உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று, மோடி அரசின் 10 ஆண்டுகால சாதனையைப் பற்றி மக்களிடம் எடுத்துக் கூறினார் அண்ணாமலை. இந்நிலையில் அண்ணாமலையின் யாத்திரை நிறைவு பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் […]

தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாராளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த […]

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி போட்டியிட இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி வர இருக்கின்ற தேர்தலில் 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. மேலும் பாரதிய ஜனதா […]

இலவச மின்சார வசதி அளிப்பதற்கான சூரிய மேற்கூரை வீடுகளுக்கு இலவச மின்சக்தி என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; “நிலையான வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக, பிரதமரின் சூர்ய வீடு: சூரிய மேற்கூரை வீடுகளுக்கு இலவச மின்சக்தி என்ற திட்டத்தை தொடங்குகிறோம். ரூபாய் 75,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டிலான இந்த திட்டம், ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை […]

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் மோதல்கள் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என தெரிவித்தார். மேலும் பாஜக மட்டும் 370 தொகுதிகளை கைப்பற்றும் என அடித்து கூறினார் . காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகள் தங்களது இருக்கையிலேயே அமர விரும்புகின்றன. அவர்களுக்கு […]

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார். நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடரான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1-ம் தேதி 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். […]

பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதால், அவர் பங்கேற்ற அயோத்தியில் நடந்த பிரான் பிரதிஷ்டை விழாவிற்கு சங்கராச்சாரியார்கள் செல்லவில்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார் உதயநிதி ஸ்டாலின். ஞாயிற்றுக்கிழமை கிழக்கு சென்னை திமுக மாவட்ட பிரிவு ஏற்பாடு செய்த கட்சி முகவர்கள் கூட்டத்தில் பேசிய, தமிழக விளையாட்டு வளர்ச்சி மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் […]