fbpx

அழகப்பனுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை!… நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை!… அண்ணாமலை பேச்சு!

நடிகை கௌதமி புகாரளித்த அழகப்பனுக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜகவில் நீண்ட வருடங்களாக பல்வேறு பொறுப்புகளில் இருந்துவந்த நடிகை கௌதமி திடீரென பாஜகவில் , அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக பாஜக தலைமைக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், பாஜகவில் அங்கம் வகிக்கும் அழகப்பன் என்பவர் தன்னை 20 வருடத்திற்க்கு முன்னர் நான் சம்பாதித்த சொத்துக்களை கவனிக்க என்னை தொடர்பு கொண்டார். ஆனால், எனது சொத்துக்களை, பணத்தை அழகப்பன் ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக நான் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன் என தெரிவித்திருந்தார். இதற்கிடையில், நடிகை கௌதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பன் என்பவர் குடும்பத்தினர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, கௌதமி புகாரளித்த அழகப்பனுக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. கவுதமி கட்சியில் இருந்து வெளியேறினாலும் பாஜக அவருக்கு உறுதுணையாக இருக்கும். அழகப்பன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என தெரியவில்லை. அழகப்பன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. நடிகை கௌதமியிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். இனியும் பேசுவேன் என தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

அதிரடி...! TNPSC தலைவர் பதவிக்கான வயது வரம்பு 62...! தமிழக அரசின் கோப்புகளை மீண்டும் திருப்பிய ஆளுநர்...!

Tue Oct 24 , 2023
டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி 2வது முறையாக திருப்பி அனுப்பினார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என கூறி திருப்பி அனுப்பினார். நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை தமிழக அரசிடம் ஆளுநர் ரவி கேட்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபும், தலைமைச் செயலாளராக இறையன்பு இருவரையும் திமுக அரசு நியமனம் செய்தது. […]

You May Like