fbpx

’இனி அலுவலகங்களுக்குள் மது அருந்தலாம்’..!! ஜூன் 12ஆம் தேதி முதல் அமல்..!! ஊழியர்கள் மகிழ்ச்சி..!!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில், ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹரியானாவில் திருத்தப்பட்ட கலால் கொள்கையானது குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விதமாக கார்ப்பரேட் அலுவலகங்களுக்குள் பீர், ஒயின் மற்றும் குடிப்பதற்கு தயாராக உள்ள பானங்களை வைத்திருப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் சலுகைகளும் அறிமுகப்படுத்துகிறது.

நேர்மறையான வேலை சூழலை உருவாக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறையானது ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற அலுவலகத்தில் குறைந்தது 5 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் ஒரு வாளகத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவை வைத்திருக்க வேண்டும் என்றும் அது சுயமானதாகவோ அல்லது குத்தகைக்கு விடப்பட்டதாகவோ இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இனி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால்..!! அமைச்சர் செந்தில் பாலாஜி வார்னிங்..!!

Fri May 19 , 2023
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகாரை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் எந்தெந்த டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து புகார் […]

You May Like