இந்தியாவில் இப்போது பண்டிகை சீசன் நடந்து வருவதால் மக்கள் அதிக அளவில் ஷாப்பிங் செய்கின்றனர். ஷாப்பிங் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு மக்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், நீங்களும் ATMல் பணம் எடுக்கப் போவதாக இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் மோசடிக்கு உள்ளாகி பல ஆயிரம் ரூபாய்களை இழக்க நேரடும்.
மோசடி செய்பவர்கள் தற்போது புதிய வழியை உருவாக்கியுள்ளனர். அதாவது, ஏடிஎம்மில் கார்டு செருகப்பட்ட இடத்தில் ஹேக்கர்கள் குளோனிங் இயந்திரத்தை நிறுவுகிறார்கள். இதன் காரணமாக உங்கள் CVV, கார்டு எண் மற்றும் பிற விவரங்களை திருடிவிடுவார்கள். இதுபோன்ற பல மோசடிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குளோனிங் செய்த பிறகு, ஹேக்கர்கள் ஏடிஎம் இயந்திரத்தின் அருகே கேமராவை வைத்து, அதன் மூலம் உங்கள் கடவுச்சொல்லையும் திருடிவிடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்களிடம் ஏடிஎம் பாஸ்வேர்ட், கார்டு நம்பர் மற்றும் CVV நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருந்தால், அவர்கள் உங்கள் கணக்கை எளிதாக ஹேக் செய்து பணத்தை திருடிவிடுவார்கள்.
முதலில் ஏடிஎம் இயந்திரத்தின் ஏதேனும் ஒரு பகுதி நீண்டுகொண்டிருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும். குளோனை உருவாக்கும் இயந்திரம் தடிமனாக இருப்பதால் சற்று உற்றுப் பார்த்தால் அது தெரியும். இது தவிர, உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடும் போதெல்லாம், உங்கள் மற்றொரு கையை வைத்து மறைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அங்கு கேமரா பொருத்தப்பட்டிருந்தால் உங்கள் கடவுச்சொல் அதில் பதிவு செய்யப்படாது.
நீங்கள் எப்போதும் ஒரு சிறிய தொகையை ஒரு கணக்கில் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்யலாம் அல்லது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தலாம். அந்தக் கணக்கில் உள்ள தொகை தீர்ந்துவிட்டால், அதை மற்றொரு முதன்மைக் கணக்கிலிருந்து மாற்ற வேண்டும். உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டாலும், ஹேக்கர்கள் அதிக தொகையை திருட முடியாது.